செய்திகள்
மத்திய அரசு

கொரோனா சூழலை ஆய்வு செய்தபிறகே கோவா திரைப்பட விழா -மத்திய அரசு

Published On 2020-09-19 06:07 GMT   |   Update On 2020-09-19 06:07 GMT
கொரோனா சூழலை ஆய்வு செய்தபிறகே கோவா திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கோவாவில் வரும் நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி நவம்பர் இறுதியில் திரைப்பட விழா நடத்தப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறி உள்ளார். ஆனால் கொரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் திரைப்பட விழா திட்டமிட்டபடி நடக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ மற்றும் சுரேஷ் ரெட்டி ஆகியோர் திரைப்பட விழா நடக்குமா? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்பத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கொரோனா சூழலை ஆய்வு செய்த பிறகே, நவம்பரில் திரைப்பட விழா நடத்துவது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News