செய்திகள்
பாராளுமன்றம்

பிஎம் கேர்ஸ் நிதியத்தை ஒழிக்க வேண்டும்- மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2020-09-18 10:32 GMT   |   Update On 2020-09-18 10:32 GMT
பிஎம் கேர்ஸ் நிதியத்தை ஒழித்துவிட்டு, அதில் உள்ள நிதியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றும்படி திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

மக்களவையில் இன்று வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் மசோதாவை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகதா ராய் பேசினார்.

அப்போது, பிஎம் கேர்ஸ் நிதியத்தை உருவாக்குவதற்கு என்ன தேவை வந்தது? என்று கேள்வி எழுப்பினார். 

இந்த நிதியத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தணிக்கை இருக்காது என்று கூறிய அவர், பிஎம் கேர்ஸ் நிதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், அந்த நிதியை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
Tags:    

Similar News