செய்திகள்
பாராளுமன்றம்

விவசாயிகள் போராட்டம், ஜிஎஸ்டி இழப்பீடு... மாநிலங்களவையில் விவாதிக்க நோட்டீஸ்

Published On 2020-09-18 04:29 GMT   |   Update On 2020-09-18 14:04 GMT
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபற்றி மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என சிவ சேனா கூறி உள்ளது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 5வது நாளான இன்று காலை 9 மணிக்கு மாநிலங்களவை கூட்டம் தொடங்கி உள்ள நிலையில், முக்கிய பிரச்சனைகள் குறித்து ஜீரோ அவரில் விவாதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுபற்றி இன்று விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் சிவ சேனா எமபி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதேபோல், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாக விவாதிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி  ராகேஷ் நோட்டீஸ் கொடுத்துள்ளார். குழந்தைகள் காணாமல் போன விவகாரம் குறித்து ஜீரோ அவரில் விவாதிக்கும்படி பாஜக எம்பி அசோக் பாஜ்பாய் நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
Tags:    

Similar News