செய்திகள்
சஞ்சய் ராவத்

ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சஞ்சய் ராவத்

Published On 2020-09-18 02:23 GMT   |   Update On 2020-09-18 02:23 GMT
ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை :

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். பண மதிப்பிழப்பிற்கு பிறகு கொரோனா பிரச்சினையை நாடு சந்தித்து உள்ளது. இதுபோன்ற சூழலில் ரெயில்வே, ஏர்இந்தியா, எல்.ஐ.சி. ஆகியவற்றை தனியார்மயமாக்க அரசு முடிவு செய்து உள்ளது.

ஜவஹர்லால் நேரு துறைமுக கழகமும் விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த துறைமுகம் தனியாருக்கு வழங்கப்பட்டால் அது தேச சொத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஆகும். தேசிய பாதுகாப்பு பார்வையிலும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் முக்கியமானதாகும். துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டால் 700 ஏக்கர் நிலமும் தனியார்வசம் செல்லும். மேலும் இதுவேலை வாய்ப்பின்மையையும் ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு ஜவஹர்லால் நேரு துறைமுக கழகத்தை தனியார்மயமாக்காது என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் எனவும் சஞ்சய் ராவத் பேசினார்.
Tags:    

Similar News