செய்திகள்
சபாநாயகர் ஓம் பிர்லா

விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன

Published On 2020-09-17 17:16 GMT   |   Update On 2020-09-17 17:16 GMT
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் இன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள் தொடர்பான மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோண்மணி அகாலிதளம் கட்சியும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரியாக உள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டன 
Tags:    

Similar News