செய்திகள்
சஞ்சய் ராவத்

நிலுவை தொகையை இழுத்தடித்தால் நாங்கள் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவது? - சஞ்சய் ராவத்

Published On 2020-09-17 10:58 GMT   |   Update On 2020-09-17 10:58 GMT
மகாராஷ்டிராவுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்தால் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்? என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பை:
  
மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நேற்று 23,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.21 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 474 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 7,92,832 பேர் குணமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்தால் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்? என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசிடம் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 25000 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வரவேண்டி உள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் அந்த நிதியை வழங்கவில்லை. இந்த நிலையில், கொரோனாவை நாங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News