செய்திகள்
பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

பிரதமர் மோடி பிறந்த நாள்- நாடு முழுவதும் பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்

Published On 2020-09-17 04:11 GMT   |   Update On 2020-09-17 04:11 GMT
டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
புதுடெல்லி:

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் பாஜக சார்பில் மிகப்பெரிய லட்டு வைத்து, பிறந்தநாள் விழா நடைபெற்றது. கட்சி தலைவர் ஷியாம் ஜாஜு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பலர் பங்கேற்றனர். பின்னர் அந்த மெகா லட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

டெல்லியில் இன்று காலை சைக்கிள் பேரணி நடைபெற்றது. பாஜக எம்பி அர்ஜுன் சிங் பேரணியை துவக்கி வைத்தார்.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News