செய்திகள்
இந்தியா-சீனா எல்லை

கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை -மத்திய அரசு

Published On 2020-09-16 10:49 GMT   |   Update On 2020-09-16 10:49 GMT
கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கடந்த ஆறு மாதங்களில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பது உண்மையா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் ஊடுருவல் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மார்ச் மாதத்தில் 4 ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஏப்ரல் மாதம் 24, மே மாதம் 8 மற்றும் ஜூலை மாதம் 11 ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்தியா-சீனா எல்லையில் ஊடுருவல் எதுவும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

மக்களவையில் நேற்று பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கிழக்கு லடாக்கில் இந்தியா சவாலை எதிர்கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டார். மேலும் அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதியில் நிலைமையை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சீனாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.
Tags:    

Similar News