செய்திகள்
சிபிஐ

ஆந்திராவில் கேந்திர வித்யாலயா ஆசிரியர் அர்ஜூன் மீனா மர்மச்சாவு- சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்

Published On 2020-09-16 05:52 GMT   |   Update On 2020-09-16 05:52 GMT
ஆந்திராவில் மர்மமான முறையில் கேந்திர வித்யாலயா ஆசிரியர் மரணம் அடைந்தது குறித்த சிபிஐ விசாரணை நடத்தும்படி நெட்டிசன்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விஜயநகரம்:

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் குமார் மீனா. ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், மர்மமான முறையில் இறந்துள்ளார். ஆந்திராவில் வசித்து வந்த வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி அவர் சடலமாக தொங்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதேசமயம், அவரது தொடையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் இருந்தது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அர்ஜூன் குமார் மீனா மரணத்திற்கு நீதி கேட்டு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அத்துடன், அர்ஜூன் மீனா கொலை செய்யப்பட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பெரும்பாலானோர் வலியுறுத்தி உள்ளனர். #JusticeforArjunMeena என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி உள்ளது. அர்ஜூன் மீனா தூக்கில் சடலமாக தொங்கும் புகைப்படத்தை பலரும் பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

Tags:    

Similar News