செய்திகள்
சிவசேனா

மும்பை, மகாராஷ்டிராவை களங்கப்படுத்த சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன: சிவசேனா

Published On 2020-09-16 02:59 GMT   |   Update On 2020-09-16 02:59 GMT
மும்பை, மகாராஷ்டிராவை களங்கப்படுத்த சமூகவலைதளங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை :

நடிகை கங்கனா ரணாவத், நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டினார். மேலும் அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கும் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதேபோல சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் கேலி சித்திரத்தை வாட்ஸ்அப்பில் பகிர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியை சிவசேனாவினர் தாக்கினர்.

இந்தநிலையில் மும்பை, மகாராஷ்டிராவை களங்கப்படுத்த சமூகவலைதளங்கள் பயன்படுத்தப்படுவதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.

இது குறித்து சாம்னா பத்திரிகையில் அக்கட்சி கூறியிருப்பதாவது:-

மும்பை, மகாராஷ்டிராவை களங்கப்படுத்த சமூகவலைதளங்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோல வதந்திகளை பரப்புபவர்களுக்கு யாராவது அவர்கள் பாணியில் பதிலடி கொடுத்தால், பேச்சு சுதந்திரம் பற்றிய அக்கறைகள் அதிகரித்து விடுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல சமூகவலைதளங்களில் நீதிபதிகள் குறித்து பரப்பப்படும் வதந்திகள், அவதூறுகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி. ரமனாஸ் கூறிய கருத்து பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News