செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள்

வேளாண் துறை மசோதாவை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-09-15 04:04 GMT   |   Update On 2020-09-15 04:04 GMT
மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் இடதுசாரி கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வேளாண் துறை தொடா்பான மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடதுசாரி கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள காந்தி சில முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்கள் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர். மேலும் வேளாண் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினர். 
Tags:    

Similar News