செய்திகள்
கோப்புப்படம்

கர்நாடகாவில் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர்

Published On 2020-09-14 01:14 GMT   |   Update On 2020-09-14 01:14 GMT
கர்நாடகாவில் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரரால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெலகாவி:

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் நாயக் சுபேதார். ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் நாயக் சுபேதார் பெலகாவிக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் விடுமுறை முடிந்ததையடுத்து பணிக்கு செல்வதற்காக நாயக் சுபேதார், பெலகாவியில் உள்ள சம்ப்ரா விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாயக் சுபேதாரை சோதனை நடத்தினர். அப்போது அவர் குண்டுகளுடன் கூடிய ஏ.கே-47 ரக துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த துப்பாக்கியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் துப்பாக்கியை இந்திய சிறிய ஆயுத அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ராணுவ வீரர் நாயக் சுபேதாரையும், பெலகாவியில் உள்ள ராணுவ மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து நாயக் சுபேதாரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மரிகாலா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News