செய்திகள்
நீதிபதி என்.வி.ரமணா,

சமூக ஊடகங்களில் அவதூறு பதிவுகள் - நீதிபதி ரமணா வேதனை

Published On 2020-09-12 22:58 GMT   |   Update On 2020-09-12 22:58 GMT
நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, ஒரு வேதனையை பதிவு செய்தார்.
புதுடெல்லி:

ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி என்.வி.ரமணா, ஒரு வேதனையை பதிவு செய்தார்.

அவர் பேசும்போது, “நீதிபதிகள் மென்மையான தாக்குதல் இலக்காக கருதப்படுகிறார்கள். சமூக ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பெருக்கத்தால் இந்த பிரச்சினை மேலும் சிக்கலாகி இருக்கிறது. நீதிபதிகள் கிசுகிசுகளுக்கும், அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கும் பலியாகின்றனர்” என குறிப்பிட்டார்.

சமீபத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றி மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவு சர்ச்சையாகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, அவரை தண்டிக்கும் நிலை உருவானது இங்கு நினைவுகூரத்தக்கது.

தொடர்ந்து நீதிபதி ரமணா பேசுகையில், “நீதிபதிகள் எல்லோரும் சொகுசு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புரிதல் இருப்பதாக தெரிகிறது. ஆனால் உண்மை வேறாக உள்ளது. இதை மற்றவர்கள் புரிந்துகொள்வது கடினமானது. தற்போதைய சூழ்நிலையில், வேறு எந்த தொழிலுடனும் ஒப்பிடமுடியாதபடி நீதிபதிகள் தியாகங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News