செய்திகள்
பப்ஜி

பப்ஜி தடை இந்திய பொருளாதாரத்தை பாதிப்பதாக வைரலாகும் பகீர் பதிவு

Published On 2020-09-11 04:54 GMT   |   Update On 2020-09-11 04:54 GMT
பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிக்கப்பட்டதால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுவதாக கூறும் பகீர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் தெரிவித்தார் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பப்ஜி-க்கு தடை விதிக்கும் நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை மேலும் அதிகமாக பாதிக்கும் என அமர்த்தியா சென் தெரிவித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே தகவலை திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் தனது ட்விட்டரில் ரீட்விட் செய்து இருக்கிறார்.



எனினும், வைரல் பதிவுகளில் உள்ளது போன்று அமர்த்தியா சென் பப்ஜி தடை பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை என தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ளது போன்று பப்ஜி தடை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தை அமர்த்தியா சென் தெரிவிக்கவில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News