செய்திகள்
கங்கனா ரனாவத்

சிவசேனா 'சோனியா சேனா'வாக மாறிவிட்டது - கங்கனா ரனாவத் கடும் தாக்கு

Published On 2020-09-10 09:06 GMT   |   Update On 2020-09-10 09:06 GMT
சிவசேனா பால்தாக்ரேவின் கொள்கைகளை கைவிட்டுவிட்டது. அது 'சோனியா சேனா' வாக மாறிவிட்டது என கங்கனா ரனாவத் தாக்கி உள்ளார்.
மும்பை:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை நகரம் உள்ளது என்று நடிகை கங்கனா விமர்சித்ததால் ஆளும் சிவசேனா அரசு கடும் கோபம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கங்கானாவின் வீட்டு வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உள்ளதாக கூறி அதனை நேற்று மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர். ஆனால் மும்பை ஐகோர்ட்டின் தலையீட்டால் இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனது வீடு இடிக்கப்பட்டது போல் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் ஆணவமும் இடிக்கப்படும் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். இன்று அனுகூலமாக உள்ள காலம் எப்போதும் அப்படியே இராது என்றும்  குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சிவசேனா மீதான கடுமையான தாக்குதலில், பால் தாக்கரே கட்சியைக் கட்டியெழுப்பிய சித்தாந்தம் அதிகாரத்திற்காக விற்கப்பட்டதாக கங்கானா ரனாவத் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.

கட்சியை "சோனியா சேனா" என்று முத்திரை குத்திய ரனாவத், பிரஹன்மும்பை மாநகராட்சியை (பிஎம்சி) கண்டித்து, அதை ஒரு குடிமை அமைப்பு என்று அழைப்பது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதாகும் என்று கூறினார்.
Tags:    

Similar News