செய்திகள்
கோப்பு படம்

ஒடிசா: சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Published On 2020-09-09 19:02 GMT   |   Update On 2020-09-09 19:02 GMT
ஒடிசா மாநிலத்தில் சிறப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நக்சலைட்டு பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புவனேஷ்வர்:

ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்கள், மாவோயிஸ்டுகள் காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். 

இந்த நக்சல், மாவோயிஸ்ட் குழுக்களை ஒழிக்க மாநிலங்களில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவடம் பஹண்டரங்கி சிர்க்கி என்ற இடத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சில நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக அம்மாநில போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸ் சிறப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது காட்டு பகுதிக்குள் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிறப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலின் போது நக்சலைட்டு பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சிறப்பு படையினர் தரப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News