செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பட்டப்பகலில் கடத்தப்பட்ட சிறுவர்கள் - வைரல் வீடியோ காட்சிகளின் பரபர பின்னணி

Published On 2020-09-09 04:12 GMT   |   Update On 2020-09-09 04:12 GMT
பட்டப்பகலில் சிறுவர்கள் கடத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பரபர பின்னணியுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆள்நடமாட்டம் இல்லாத சாலை ஒன்றில், வெள்ளை நிற காரில் வரும் மூன்று பேர் சிறுவர்களை கடத்தி செல்லும் பரபர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

45 நொடிகள் ஓடும் வீடியோவில், வெள்ளை நிற கார் மெதுவாக வந்து சாலையின் குறுக்கே நிற்பதும், பின் அதில் இருந்து மூன்று பேர் இறங்கி, அவ்வழியே வந்த சிறுவர்களை வேகமாக காரினுள் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பி செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

வைரல் வீடியோ 'அதிகம் பகிர வேண்டும், இவ்வாறு செய்வதால் மிகப்பெரிய உதவியை செய்ததற்கு சமம்' என்பது போன்ற தலைப்புடன் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. 



வேகமாக பகிரப்படும் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மூன்று ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என்பதும், உண்மையில் அது கடத்தல் சம்பவம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த சிறுவர்களை தூக்கி சென்றது, அவர்களின் தந்தை தான்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்ததால், சிறுவர்களை கொடுமைப்படுத்தும் தாயிடம் இருந்து அவர்களை காப்பாற்ற தந்தை இப்படி செய்ததார் என தெரியவந்துள்ளது. அந்த வகையில் வைரல் வீடியோவுடன் வலம் வரும் கடத்தல் சம்பவம் கற்பனை அடிப்படையில் வைரலாகி வருவது உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News