செய்திகள்
இந்திய எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகள்

இந்திய எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகள் - நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் ஒப்படைப்பு

Published On 2020-09-07 17:55 GMT   |   Update On 2020-09-07 17:55 GMT
எல்லையில் சுற்றி திரிந்த கால்நடைகளை நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது.
கிழக்கு காமெங்:

அருணாசல பிரதேசத்தின் கிழக்கு காமெங் பகுதியில் சீனாவை ஒட்டிய இந்திய எல்லை கோட்டு பகுதியில் 13 காட்டு எருதுகள் மற்றும் 4 கன்றுகள் மேய்ந்து கொண்டிருந்தன.  கடந்த ஆகஸ்டு 31ந்தேதி அவற்றை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர்.

இதன்பின்னர் அவற்றை இந்திய ராணுவம் நல்லெண்ண அடிப்படையில் சீனாவிடம் இன்று ஒப்படைத்து உள்ளது.  இதனை பெற்று கொண்ட சீன அதிகாரிகள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் 17 ஆயிரம் அடி உயர பீடபூமி பகுதியில் வழி தவறி சென்ற ஒரு பெண் உள்பட 3 சீனர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை அளித்து அவர்களது இருப்பிடத்துக்கு இந்திய ராணுவம் வழியனுப்பி வைத்தது.  இதுபோன்ற நல்லெண்ண அடிப்படையிலான விசயங்களை சீனாவுக்கு இந்தியா மேற்கொண்டு வருகிறது.

எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அருணாசல பிரதேசத்தில் வசித்து வரும் பழங்குடி இளைஞர்கள் வேட்டைக்கு காட்டுக்கு சென்ற வழியில் அவர்களில் 5 பேரை சீன ராணுவம் சிறை பிடித்து சென்றது என தகவல் வெளியானது.  அவர்களை தேடி அருணாசல பிரதேச போலீசார் குழு சென்றுள்ளது.  எனினும், அவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News