செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வாகா எல்லையில் தேசிய கொடி சாதனை படைத்ததாக வைரலாகும் வீடியோ

Published On 2020-09-07 04:26 GMT   |   Update On 2020-09-07 04:26 GMT
வாகா எல்லை பகுதியில் இந்திய தேசிய கொடி இப்படியொரு சாதனை படைத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய தேசிய கொடியை ஏற்றும் நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் உள்ள தேசிய கொடி உலக சாதனை படைத்து இருப்பதாக கூறும் தகவல்களுடன் வீடியோ அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

வீடியோவில் இருப்பது 120x80 அடி பெரிய தேசிய கொடி என்பதும், அது பஞ்சாபின் வாகா எல்லை பகுதியில் உள்ள 360 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டு இருப்பதாகவும், இது ஒரு உலக சாதனை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், வாகா எல்லையில் உள்ள தேசிய கொடி கொண்டு இப்படி ஒரு உலக சாதனை படைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வைரல் வீடியோ 2016 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது ஆகும். 

உண்மையில் இந்த வீடியோ 2016 ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வீடியோ தலைப்பில் மிகப்பெரிய இந்திய தேசிய கொடியை முதல்வர் கேசிஆர் ஐதராபாத்தில் ஏற்றுகிறார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் வீடியோவில் இருக்கும் தேசிய கொடி 108x72 அடி அளவு கொண்டது என்றும் இது 291 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டது ஆகும். இது 2016 ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட போது இந்தியாவின் பெரிய தேசிய கொடி என்ற பெருமையை பெற்று இருந்தது. 

அந்த வகையில் வைரல் வீடியோவில் இருக்கும் தேசிய கொடி வாகா எல்லையில் அமைக்கப்பட்டது இல்லை என்பதும், இது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News