செய்திகள்
தரவரிசை பட்டியலை வெளியிட்ட நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

வர்த்தக சீர்திருத்த செயல்திட்ட தரவரிசையில் ஆந்திர மாநிலம் மீண்டும் முதலிடம்

Published On 2020-09-05 10:50 GMT   |   Update On 2020-09-05 10:50 GMT
வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம்-2019 தரவரிசைப் பட்டியலில் ஆந்திர மாநிலம் முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் தொடர்பான, ‘மாநில வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம்-2019’ தரவரிசைப் பட்டியலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். மாநிலங்களின் தொழில் சீர்திருத்த செயல் திட்டங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த தரவரிசையில் ஆந்திர பிரதேசம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தெலுங்கானாவை பின்னுக்குத் தள்ளி உத்தர பிரதேச மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியது. 
Tags:    

Similar News