செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்காக பெங்களூருவில் இருந்து கா‌‌ஷ்மீருக்கு விமானத்தில் பறந்த பிளாஸ்மா

Published On 2020-09-03 01:09 GMT   |   Update On 2020-09-03 01:09 GMT
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மாவை தனி விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து கா‌‌ஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூரு:

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை தனது கோரப்பிடியில் சிக்கவைத்துள்ளது. அதுபோல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மோசமான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும். அவர்கள் அதை தானம் செய்தால் மட்டுமே கொரோனா நோயாளிகளுக்கு அதை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிளாஸ்மா கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கா‌‌ஷ்மீரில் கொரோனா பாதித்த 61 வயது மூதாட்டி மற்றும் 63 வயது முதியவர் ஆகிய 2 பேரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா அவசரமாக தேவைப்பட்டது. அவர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையை அணுகினர். இதையடுத்து அந்த தனியார் மருத்துவமனை, அந்த 2 பேருக்கும் தேவைப்படும் பிளாஸ்மாவை உடனடியாக தனி விமானம் மூலம் கா‌‌ஷ்மீருக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிளாஸ்மா, நேற்று முன்தினம் மதியம் கா‌‌ஷ்மீருக்கு சென்றடைந்தது. அந்த பிளாஸ்மா மூலம் மூதாட்டி, முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News