செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

Published On 2020-08-31 23:37 GMT   |   Update On 2020-08-31 23:37 GMT
மணிப்பூர் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் பல்வேறு வீடுகள் அதிர்ந்தன.
ஸ்ரீநகர்:

மணிப்பூர் மாநிலத்தின் ஹுரூல் மாவட்டத்தில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தை மையமாக கொண்டு இன்று அதிகாலை 2.39 மணியளவில் திடீரென நிலநடுகம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 ஆக பதிவான இந்திய புவிசார் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் சற்று அதிர்ந்தன. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தின் அளவு குறைவு என்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நேற்று இரவு 7.30 மணியளவிலும் மணிப்பூரில் 4.0 என்ற ரிக்டர் அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டது. 

மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்ற போது அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களால் மணிப்பூரில் மக்கள் சற்று பீதியடைந்துள்ளனர். 

Tags:    

Similar News