செய்திகள்
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

பேஸ்புக், வாட்ஸ் அப் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்பட்டன - காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2020-08-31 22:57 GMT   |   Update On 2020-08-31 22:57 GMT
இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுப்பதற்காக ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’ ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய சமூக ஊடகங்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசினால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளில் அண்மையில் கட்டுரைகள் வெளியாகின.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுப்பதற்காக ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’ ஆளும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் ‘‘இந்தியாவின் ஜனநாயகத்தை கெடுப்பதற்கும் இந்தியாவின் சமூக நல்லிணக்கத்தை சீரழிப்பதற்கும் ஆளும் பா.ஜ.க.வுடன் ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’ எவ்வாறு இணைந்துள்ளன என்பதை நம்பகமான சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை ‘பேஸ்புக்’ மற்றும் ‘வாட்ஸ்அப்’புக்கான அனைத்து ஒப்பந்தங்களும் உரிமங்களும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்’’ என கூறினார்.
Tags:    

Similar News