செய்திகள்
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

மன் கி பாத் உரையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் சிறப்பை குறிப்பிட்ட பிரதமர் மோடி

Published On 2020-08-30 06:24 GMT   |   Update On 2020-08-30 06:24 GMT
உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது என்றும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம் என்றும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குவதாகவும் அவர் கூறினார்.

‘குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது. உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம்.

கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக்கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படவேண்டும்’ என்று பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News