செய்திகள்
சிவராஜ் சிங் சவுகான்

அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை கட்டினால் போதும் - மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

Published On 2020-08-28 13:36 GMT   |   Update On 2020-08-28 13:36 GMT
அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சார பில் தொகையை மக்கள் கட்டினால் போதும் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
போபால்:

மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, மின் வாரியத்திற்கு மக்கள் செலுத்த வேண்டிய அனைத்து அதிகப்படியான பில் தொகையையும் தள்ளி வைக்க அரசு முடிவு செய்துள்ளது.  அதனால், அடுத்த மாதத்தில் ஒரு மாத மின்சாரத்திற்கான பில் தொகையை மக்கள் கட்டினால் போதும் என கூறினார்.

கொரோனா பாதிப்புள்ள சூழலில், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துவதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  மாணவ மாணவியருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட கூடும் என கூறி தேர்வுகளை தள்ளி வைக்க வலியுறுத்தி வருகின்றன.  இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.

ஆனால், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.  இதுபற்றி சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை சரியான நேரத்தில் நடத்த வேண்டும்.  அதனால், நம்முடைய மாணவர்களின் ஒரு வருடம் வீணாகாமல் தடுக்கப்படும்.  இது அவர்களுடைய வருங்காலம் பற்றியது என கூறியுள்ளார்.
Tags:    

Similar News