செய்திகள்
உச்சநீதிமன்றம்

கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published On 2020-08-28 08:21 GMT   |   Update On 2020-08-28 08:21 GMT
கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
புதுடெல்லி: 

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது.

இதனிடையே கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சரியான முடிவல்ல என்றும், பீகாரில் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பின் சட்டசபை தேர்தலை நடத்தலாம், அதுவரை தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பீகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில் கொரோனாவை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tags:    

Similar News