செய்திகள்
முதல்மந்திரி பினராயி விஜயன்

தங்க கடத்தல் வழக்கு - பினராயி விஜயன் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

Published On 2020-08-24 22:16 GMT   |   Update On 2020-08-24 22:16 GMT
கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்:

கேரளாவில், 2 மாதங்களுக்கு முன்பு தங்க கடத்தல் விவகாரம் வெடித்தது. தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்-மந்திரி அலுவலகம் சம்பந்தப்பட்டு இருப்பதால், முதல்-மந்திரி பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

பினராயி விஜயன் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி நோட்டீஸ் கொடுத்தது. அதற்காக நேற்று கேரள சட்டசபையின் ஒருநாள் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வி.டி.சதீஷன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

140 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 91 உறுப்பினர்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 45 உறுப்பினர்களும், பா.ஜனதா, சுயேச்சை தரப்பில் தலா ஒரு உறுப்பினர் உள்ளனர். பல மணி நேர விவாதத்துக்கு பிறகு ஓட்டெடுப்பு நடந்தது. அதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும், எதிராக 87 வாக்குகளும் கிடைத்தன. இதனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. பினராயி விஜயன் அரசு தப்பியது.
Tags:    

Similar News