செய்திகள்
கோப்பு படம்

ஜம்மு: பொது இடங்களில் வைபை சேவை தொடக்கம்

Published On 2020-08-24 21:32 GMT   |   Update On 2020-08-24 21:32 GMT
ஜம்முவில் முதல் கட்டமாக 6 இடங்களில் வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீக்கப்பட்டு அந்த பகுதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது ஜம்மு-காஷ்மீரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து துண்டிக்கப்பட்ட இணையதள சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இணையதளத்தின் வேகமும் 4ஜி அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு நகரில் உள்ள பொது இடங்கள் சிலவற்றில் முதல்கட்டமாக வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. 8 இடங்களில் வைபை சேவை அளிக்க திட்டம் தொடங்கப்பட்டு தற்போதுவரை 6 இடங்களில் வைபை சேவை தொடங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 இடங்களில் வைபை சேவை இன்னும் 2 நாட்களில் தொடங்கப்பட உள்ளது.

ஜம்மு நகரின் 6 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வைபை சேவையை காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சினாகா தொடங்கி வைத்தார். வைபை சேவை தற்போது அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஏற்படும் சூழ்நிலையை பொறுத்து மேலும் சில பகுதிகளுக்கு வைபை சேவை விரிவாக்கப்பட உள்ளது. 

இந்த வைபை சேவை பயனாளர்களின் முதல் 30 நிமிடங்களுக்கு இலவசமாகவும், அதன் பின்னர் பயன்பாட்டிற்கு ஏற்ப சேவைக்கட்டணமும் வசூலிக்கப்பட உள்ளது.

ஸ்ரீநகரின் 6 பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வைபை சேவை சுற்றுலா துறைக்கும், இளைஞர்களுக்கும், தொழில்துறையினருக்கும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News