செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா உயிரிழப்புகளுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2020-08-24 19:13 GMT   |   Update On 2020-08-24 19:13 GMT
கொரோனா உயிரிழப்புகளுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது
புதுடெல்லி:

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கொள்கை முடிவு வகுக்க வேண்டும் என்று கோரி ஹஷிக் தயிகண்டி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



மனுதாரர் தரப்பில் முன்வைத்த வாதத்தில், ‘நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்கப்படவில்லை. கொரோனா மரணத்துக்கு டெல்லி அரசு இழப்பீடாக ரூ.1 கோடி அறிவித்தது. சில மாநிலங்களில் ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்கும் வகையில் ஒரு தேசிய கொள்கை முடிவை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், “ஒவ்வொரு மாநிலத்திலும் வேறு வேறு அளவில் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. அது அந்த மாநிலத்தின் நிதி நிலைமையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதில் நாங்கள் தலையிட முடியாது” என்று கூறினார்கள். மேலும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News