என் நண்பனை இழந்து பெரிதும் தவிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
என் நண்பனை இழந்து தவிக்கிறேன் - அருண் ஜெட்லி குறித்து பிரதமர் மோடி உருக்கம்
பதிவு: ஆகஸ்ட் 24, 2020 15:24
பிரதமர் மோடி
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமது நண்பரான அருண் ஜேட்லியை இழந்து பெரிதும் தவிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், என் நண்பனை இழந்து பெரிது தவிக்கிறேன்.
அருண் ஜேட்லி இந்தியாவுக்காக விடாமுயற்சியுடன், இரவுபகலாக உழைத்தவர். அறிவுக்கூர்மை, புத்திசாலித்தனம், சட்ட வல்லுனத்துவம், அன்பான ஆளுமையுடன் திகழ்ந்தவர் ஜெட்லி என புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
Related Tags :