செய்திகள்
விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி இல்லை- உச்ச நீதிமன்றம்

Published On 2020-08-21 08:49 GMT   |   Update On 2020-08-21 08:49 GMT
விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
புதுடெல்லி:

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதனை பின்பற்றி பல்வேறு மாநிலங்கள் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மக்கள் கூடும் விழாக்கள் மற்றும் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மும்பையில் உள்ள ஜெயின் கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மும்பையில் உள்ள தாதர், பைகுல்லா மற்றும் செம்பூரில் உள்ள ஜெயின் கோவில்களை ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மக்களின் வழிபாட்டிற்காக திறக்க அனுமதி அளித்தது.

‘இந்த சலுகையானது வேறு எந்த கோவில்களுக்கோ, விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கோ பொருந்தாது. விநாயகர் சதுர்த்தி போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க முடியாது, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது. கொரோனா சூழலில் மக்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்தையும் அனுமதிக்க முடியாது’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News