செய்திகள்
மரத்தடிகளால் தற்காலிக பாலம் அமைத்து காட்டாற்றைக் கடக்கும் மக்கள்

மரத்தடிகளால் தற்காலிக பாலம் அமைத்து காட்டாற்றைக் கடக்கும் மக்கள் -வீடியோ

Published On 2020-08-20 04:27 GMT   |   Update On 2020-08-20 04:27 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டேராடூன்:

வட இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உத்தரகாண்ட், அசாம், பீகார், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை நீடிப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை நீடிப்பதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முசோரி-டேராடூன் சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 10 கிமீ நீளத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மலைப்பகுதி கிராமங்களில் உள்ள சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜோஷிமத் அருகே உள்ள ஆரோசி கிராமத்தில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடப்பதற்கு மரத்தடிகள் மூலம் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அந்த பாலத்தின் மூலம் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  



Tags:    

Similar News