செய்திகள்
திருப்பதி கோவில்

ஏழுமலையான் கோவிலின் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாண வடிவில் பொதுமக்கள் பார்வைக்கு- தேவஸ்தானம் அறிவிப்பு

Published On 2020-08-19 07:56 GMT   |   Update On 2020-08-19 07:56 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் பார்வைக்கு கொண்டுவரும் பணிகள் தொடங்கியுள்ளன.
திருப்பதி:

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் என பல விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்படுகின்றன.

அவ்வாறு வழங்கப்பட்ட 450-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் ஆகம விதிகள் தடையாக இருந்தன.

இதையடுத்து மாற்று ஏற்பாடாக முப்பரிமாண வடிவில் பக்தர்கள் பார்வைக்கு வைக்க முடிவெடுக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் குறைவாகவே அனுமதிக்கப்பட்டு வருவதால், இந்த சூழலை பயன்படுத்தி பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News