செய்திகள்
டிராக்டரில் கர்ப்பிணியை அழைத்து சென்ற காட்சி

வெள்ளத்தில் மூழ்கிய சாலை... பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டிராக்டரில் அழைத்துச் சென்ற போலீசார்

Published On 2020-08-17 03:18 GMT   |   Update On 2020-08-17 03:18 GMT
மழை வெள்ளத்தில் சாலை மூழ்கியதால், கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக சென்னூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சாலை மூழ்கியதால் அவர்களால் மருத்துவமனைக் செல்ல முடியவில்லை. 

இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் ஒரு டிராக்டரில் ஏற்றி தண்ணீர் சூழ்ந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த சேவையை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Tags:    

Similar News