செய்திகள்
கோப்பு படம்

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு - பிரதமர் மோடி

Published On 2020-08-15 04:22 GMT   |   Update On 2020-08-15 04:22 GMT
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: 

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடையவும், பெருமையடையவும் செய்கின்றனர். பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பிலும், வேலைவாய்ப்பிலும் சமமான வாய்ப்புகளை வழங்க நாடு உறுதிபூண்டுள்ளது.

பெண்கள் இன்று நிலக்கரி சுரங்கப்பணிகளிலும் வேலை செய்கின்றனர். நமது மகள்கள் (பெண்கள்) போர் விமானங்களை ஓட்டி வானத்தையும் தொடுகின்றனர்.

நமது மகள்களின் (பெண்களின்) குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்த குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயம் தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.

என அவர் கூறினார்.

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News