செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

Published On 2020-08-15 03:15 GMT   |   Update On 2020-08-15 03:15 GMT
சுதந்திரதின உரையின் போது கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-

* நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

* எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.

* சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குகிறேன்.
 
* கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும்.

* நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

* கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

* கொரோனா காலத்தில் எண்ணிலடங்காத வென்டிலேட்டர்களை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறோம்.

* கொரோனா காலத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

*கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 

* கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

* நம்முடைய கனிமவளங்களை கொண்டு நாமே உற்பத்தியும் செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரமாக சுயசார்பு பாரதம் இருக்கிறது.

* மக்கள் மனதில் நிலைக்க வேண்டியது, உள்நாட்டு பொருட்கள், உள்நாட்டு முன்னேற்றம்.

* விவசாயிகளின் செலவுகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

* விவசாய தயாரிப்புகளை பன்னாட்டு சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
Tags:    

Similar News