செய்திகள்
கோப்பு படம்

மகாராஷ்டிர சிறைச்சாலைகளில் 1,000 கைதிகளுக்கு கொரோனா

Published On 2020-08-13 22:05 GMT   |   Update On 2020-08-13 22:05 GMT
மகாராஷ்டிராவில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. 
நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  
இதற்கிடையில், அம்மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும். சிறைச்சாலைகளில் பணியாற்றிவரும் அதிகாரிகளில் 292 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 

இதனால் அம்மாநிலத்தில் சிறைக்கைதிகள், சிறைத்துறை அதிகாரிகள் என கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,292 ஆக உள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News