செய்திகள்
கொரோனா வைரஸ்

பூடானில் முதல்முறையாக முழுஊரடங்கு அமல்

Published On 2020-08-13 20:49 GMT   |   Update On 2020-08-13 20:49 GMT
கொரோனா தொற்று பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காக பூடானில் நாடு முழுவதும் முதல்முறையாக முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திம்பு:

இந்தியாவின அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாட்டின் அனைத்து எல்லைகளும் அடைக்கப்பட்டன. இருப்பினும் அங்கு கொரோனா பரவல் குறைவாக இருந்ததால் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தநிலையில் குவைத்தில் இருந்த பூடான் திரும்பிய 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நோய் பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காக பூடானில் நாடு முழுவதும் முதல்முறையாக முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதியில்லை. தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்து உள்ளது. 7½ லட்சம் மக்கள் தொகை இந்த நாட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News