செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பினராயி விஜயன், கவர்னர்

55 பேரை பலி கொண்ட மூணாறு நிலச்சரிவு இடத்திற்கு நேரில் சென்று கவர்னர், முதல்வர் ஆய்வு

Published On 2020-08-13 07:53 GMT   |   Update On 2020-08-13 07:53 GMT
இடுக்கி மாவட்டம் மூணாறு தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கேரள மாநில முதல்வர், கவர்னர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு ராஜமலை பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் கடந்த 7-ந்தேதி இரவு ஏற்பட்ட இந்த பெரும் நிலச்சரிவில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வீடுகளுடன் மண்ணுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். கடந்த ஐந்து ஆறு நாட்களாக நடைபெற்ற மீட்புப்பணியில் இதுவரை 55 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்னும் சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கவர்னர் ஆரிஃப் முகமது கான் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.



அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு ஆறுதல் தெரிவித்தனர். மீட்புப்பணி குறித்தும் கேட்டறிந்தனர். கேரள மாநில முதல்வர் அறிவித்த நிவாரணம் குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News