செய்திகள்
கேரளாவில் உள்ள கோவில் (கோப்புப்படம்)

கேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறப்பு

Published On 2020-08-13 03:17 GMT   |   Update On 2020-08-13 03:17 GMT
கேரளாவில் சபரிமலையைத் தவிர்த்து, பெரும்பாலான கோவில்களை திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் ஊரடங்கு தளர்வுக்குப்பின் சில இஸ்லாமிய மற்றும் கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட போதும் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை.

சபரிமலை போன்ற கோவில்கள் திறக்கப்பட்டால் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக வருவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

இருப்பினும் மலையாள மக்களின் புத்தாண்டான விஷு பண்டிகையையொட்டி திங்கட்கிழமை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் கணபதி ஹோமம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் உள்ளதாகும்..

கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படும் என்றும் பக்தர்கள் விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News