செய்திகள்
மகாராஷ்டிராவில் பாலை விலைக்கு விற்காத அபூர்வ கிராமம்

மகாராஷ்டிராவில் பாலை விலைக்கு விற்காத அபூர்வ கிராமம்

Published On 2020-08-12 03:50 GMT   |   Update On 2020-08-12 03:50 GMT
மகாராஷ்டிராவில் மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமத்தில் தலைமுறை, தலைமுறையாக பாலை விற்பனை செய்யாத பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
மும்பை :

மகாராஷ்டிராவில் மாநிலம் ஹிங்கோலியில் ஏலேகாவ் கவாலி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 90 சதவீத வீடுகளில் கால்நடைகள் உள்ளன. எனினும் இந்த கிராம மக்கள் பாலை விலைக்கு விற்பனை செய்வது கிடையாது. ஆனால் பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

பாலை விலைக்கு கொடுக்காது குறித்து அந்த கிராமத்தை சோ்ந்த ராஜா பாவு மன்டாடே(வயது60) என்பவர் கூறுகையில், ‘‘கிராமத்தின் பெயரான ஏலேகாவ் கவாலி என்றாலே பால்காரர்களின் ஊர் என்பது பொருள். நாங்கள் கிருஷ்ணர் கடவுளின் வழிதோன்றல்களாக நினைக்கிறோம்.

எனவே நாங்கள் பாலை விற்பனை செய்வது இல்லை. வழக்கமாக கிருஷ்ண ஜெயந்தி இங்குள்ள கிருஷ்ணர் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படும். கொரோனா காரணமாக இந்த முறை அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

தலைமுறை, தலைமுறையாக பாலை விற்பனை செய்யாத பழக்கம் அந்த கிராமத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை இந்துகள் மட்டுமின்றி மற்ற மதத்தினரும் பின்பற்றி வருகின்றனர். இதுகுறித்து அந்த ஊர் தலைவர் சேக் கவுசர்(44) கூறும்போது, இந்து, முஸ்லிம் அல்லது எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கூட பாலை விற்பனை செய்வது இல்லை. 550 வீடுகளில் 90 சதவீத வீட்டில் பசு, எருமை, ஆடுகள் போன்ற கால்நடைகள் உள்ளன” என்றாா்.
Tags:    

Similar News