செய்திகள்
வருமான வரித்துறை

ஹவாலா பணப்பரிமாற்றம் - சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Published On 2020-08-11 20:12 GMT   |   Update On 2020-08-11 20:12 GMT
ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக டெல்லியில் உள்ள சீன நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து ஹவாலா மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் சந்தேகத்திற்கு இடமான சீன நிறுவனங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 40 போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.1000 கோடிக்கு பணப்பரிமாற்றம்  நடந்திருப்பதும், வங்கி ஊழியர்கள், ஆடிட்டர்களுக்கு இதில் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹவாலா மோசடியில் தொடர்புள்ள வங்கி ஊழியர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News