செய்திகள்
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் - பிரதமர் மோடிக்கு மம்தா வலியுறுத்தல்

Published On 2020-08-11 18:28 GMT   |   Update On 2020-08-11 18:28 GMT
கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கொல்கத்தா:

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன், இன்று காலை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக, ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டில்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி, மத்திய பிரதேச முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, பீஹார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக மத்திய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.
Tags:    

Similar News