செய்திகள்
நிலச்சரிவால் சேதம் அடைந்த கடைகள்

உத்தரகாண்டில் பேய்மழையால் நிலச்சரிவு: பல கடைகள் சேதம்- போக்குவரத்து துண்டிப்பு

Published On 2020-08-11 03:53 GMT   |   Update On 2020-08-11 03:53 GMT
உத்தரகாண்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பல கடைகள் சேதமடைந்த நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அசாம், பீகார், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. பீகார், அசாமில் ஓரளவிற்கு மழை குறைந்துள்ளது.

உத்தரகாண்டில் நேற்றிரவு ஓரிரு இடங்களில் பேய்மழை பெய்தது. இதில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது, சமோளி மாவட்டத்தின் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்றட்டது. இந்த நிலச்சரிவில் பல கடைகள் சேதமாகின. மேலும், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
Tags:    

Similar News