செய்திகள்
பித்தளை மணி

அயோத்தி ராமர் கோவில் - 15 கி.மீ. தூரத்துக்கு சத்தம் கேட்கும் பித்தளை மணி தயார் ஆகிறது

Published On 2020-08-10 08:13 GMT   |   Update On 2020-08-10 08:13 GMT
அயோத்தி ராமர் கோவிலுக்கு 2 டன் எடையில் பித்தளை மணி தயார் ஆகிறது. இதன் சத்தம் 15 கி.மீ. தூரம் வரை கேட்கும்.
லக்னோ:

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. ராமர் கோவிலுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வந்தவுடனே, கோவிலில் பிரமாண்ட மணி செய்வதற்கு மனுதாரர்களில் ஒருவரான ‘நிர்மோகி அகாரா’ ஆர்டர் கொடுத்தது.

உத்தரபிரதேசத்தில், கோவில் மணி செய்வதற்கு பெயர் பெய்ய ஜலேசர் நகரில் உள்ள விகாஸ் மிட்டல் என்பவருக்கு இந்த ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டது. 4 தலைமுறைகளாக கோவில் மணி செய்து வரும் டாவ் தயாள் என்பவர், இந்த மணியை செய்யும் பொறுப்பை ஏற்றார். மணியை வடிவமைத்தவர், இக்பால் மிஸ்திரி என்ற முஸ்லிம் ஆவார். இந்து, முஸ்லிம் கைவினை கலைஞர்கள் 25 பேர் சேர்ந்து 4 மாதங்களாக பாடுபட்டு மணியை உருவாக்கி உள்ளனர். இறுதிக்கட்ட வேலைக்கு பிறகு, அயோத்திக்கு இந்த மணி அனுப்பப்படும்.

2 டன் 100 கிலோ எடையுடன் மணி இருக்கிறது. இந்தியாவிலேயே இதுதான் பெரிய மணியாக இருக்கும் என்று தெரிகிறது. இதன் ஒலிச்சத்தம் 15 கி.மீ. தூரத்துக்கு கேட்கும் என்று விகாஸ் மிட்டல் தெரிவித்தார். ரூ.21 லட்சம் மதிப்புள்ள இந்த மணியை கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்போவதாக அவர் கூறினார்.
Tags:    

Similar News