செய்திகள்
திமுக எம்.பி., கனிமொழி

திமுக எம்.பி., கனிமொழி புகார் - விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

Published On 2020-08-09 18:35 GMT   |   Update On 2020-08-09 18:35 GMT
தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் இந்தியில் கேள்வி கேட்டது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்க சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே, விமான நிலையத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை "நீங்கள் இந்தியரா?" என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது? என்று டுவிட்டர் பதிவில் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில். தி.மு.க. எம்.பி.,கனிமொழி புகார் தொடர்பாக சி.ஐ.எஸ்.எப். அதிகாரியிடம் விசாரணை நடத்த சி.ஐ.எஸ்.எப். உத்தரவிட்டுள்ளது.

விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை என சி.ஐ.எஸ்.எப். தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பயண விவரங்களை சி.ஐ.எஸ்.எப். கோரியுள்ளது.
Tags:    

Similar News