செய்திகள்
கேரளா விமான விபத்து

கேரள விமான விபத்து- காயமடைந்தவர்களை காரில் அழைத்து சென்று உதவிய உள்ளூர்வாசிகள்

Published On 2020-08-09 13:49 GMT   |   Update On 2020-08-09 13:49 GMT
கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
கேரளா:

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.

விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கோழிக்கோடு விமான விபத்தின் போது மீட்பு பணிகள் எப்படி நடைபெற்றன என்பது பற்றிய வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

கனமழை, கொரோனா அச்சம் பற்றி எதுவும் கவலைப்படாத உள்ளூர் மக்கள், உயிருக்கு போராடிய மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை காரணமாக உள்ளூர்வாசிகள் பலர் தங்களது சொந்த காரிலேயே, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News