செய்திகள்
என்கவுன்ட்டர்

உ.பி.: 2005 பா.ஜனதா தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

Published On 2020-08-09 07:51 GMT   |   Update On 2020-08-09 07:51 GMT
உத்தர பிரேதேச மாநிலத்தில் பா.ஜனதா தலைவர் 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை செய்ய்பபட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் மா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டே என்று ஹனுமான் பாண்டே. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜனதா தலைவர் கிருஷ்ணானந்த் ராய் மொகமதாபாத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி கிருஷ்ணானந்த் ராய் கொலை செய்யப்பட்டார். இவருடன் மேலும் ஆறு பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் ஹனுமான் பாண்டேவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச போலீசின் சிறப்புப்படையினரால் லக்னோ சரோஜினி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாண்டே என்கவுன்ட்டர் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு உத்தர பிரதேச மாநில போலீசார் சிபிஐ-யிடம் ஒப்படைத்தனர். சிபிஐ ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தியது. ஆனால், நேரில் கண்ட சாட்சிகள் பல்டி அடித்ததால் குற்றம்சாட்டப்படட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News