செய்திகள்
பிரதமர் மோடி

விவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் உதவி: பிரதமர் மோடி

Published On 2020-08-09 06:18 GMT   |   Update On 2020-08-09 06:56 GMT
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிதியத்தின் மூலம் 3 சதவீத வட்டியில் ரூ. 2 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும். விவசாயப் பொருட்களை பாதுகாக்க, குளிர் சாதன கிடங்குகள் அமைக்க கடன். 12 பொதுத்துறை வங்கிகள், 11 வேளாண் வங்கிகளுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். நடப்பாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி, 3 ஆண்டுகளில் ரூ. 30 ஆயிரம் கோடி வீதம் கடன். ஆதார் எண் இணைக்கப்பட்ட  வங்கிக்கணக்கில் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்தால் ஆன்லைன் வழியாகவே கடன் ஒப்புதல் வழங்கப்படும்.

பின்னர் விவசாயிகளிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் விவசாயிகளையும், விவசாயம் சார்ந்தவர்களையும் கொண்டு வர முயற்சி நடக்கிறது. ஒரே தேசம், ஒரே சந்தை சாத்தியப்பட்டள்ளது. வேளாண் பொருட்களை உற்பத்தி செய்பவர்களே நேரடியாக விற்பனை செய்ய முடியும். 

அன்னை பூமியை காக்க குறைந்த அளவு யூரியாவை பயன்டுபடுத்துக்கள். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுளளது. வேளாண் உற்பத்தியை நடப்பாண்டில் அதிகரிக்க முயற்சி செய்யும் மத்திய பிரதேச விவசாயிகளுக்கு நன்றி.

விவசாயப் பொருட்களை பாதுகாக்க, சேமிப்பு கிடங்குகள் அமைக்க கடன் வழங்கப்படும். வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் மூலம் விவசாயிகளே நவீன சேமிப்பு கிடங்குகளை அமைக்க முடியும். 17 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக 8.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய பொருட்களை ரெயில் மூலம் அனுப்புவதன் மூலம் கெட்டுப்போகாத நிலை ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் இருந்து பீகார் வரை விவசாய ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News