செய்திகள்
ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து

ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்

Published On 2020-08-09 03:24 GMT   |   Update On 2020-08-09 03:24 GMT
கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விழுந்தும், அந்த விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது கிடைத்துள்ளன.

கோழிக்கோடு விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்து விழுந்தும், அந்த விமானம் தீப்பிடிக்காமல் இருந்தது ஏன் என்பதற்கான காரணங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய விமானி தீபக் சாத்தே, விமானம் ஓட்டுவதில் 36 ஆண்டு அனுபவம் மிக்கவர். இந்த விமான விபத்துக்கு கோழிக்கோடு விமான நிலையத்தின் அமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. மலைக்குன்றை சமதளமாக்கி அமைக்கப்படும் ‘டேபிள் டாப்’ என்ற அமைப்பில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரிப்பூர் என்ற பகுதியில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. விமான நிலையத்தின் ஓடுபாதை 2,850 மீட்டராகும். விமான நிலைய பகுதியில் பலத்த மழை பெய்ததால் ஓடுதளத்தில் தண்ணீர் இருந்துள்ளது. விமானி சாத்தேயால் ஓடுதளத்தை முழுமையாக கண்டறிய முடியவில்லை. 28-வது ஓடுபாதை வழியாக விமானத்தை இறக்குமாறு சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 10-வது ஓடுபாதையில், அதுவும் நடு பகுதியில் இறக்கியதால் ஓடுபாதையை தாண்டி விமானம் தடுப்பு சுவரில் மோதி 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்து உள்ளது. முன்னதாக விமானத்தை வானத்தில் வட்டமிட்டபடியே இரண்டு முறை தரையிறக்க முயன்றும், விமானியால் தரையிறக்க முடியவில்லை. 3-வது முறையாக தரையிறக்கும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விமானி சாத்தே, விபத்தில் விமானம் சிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி விமானத்தின் எரிபொருளை காலி செய்து விடவேண்டும் என்று முடிவு செய்து, வானில் வட்டமிட்டபடியே எரிபொருளை காலி செய்துள்ளார். இதனால்தான் விமானம் இரண்டாக உடைந்தும் வெடித்து தீப்பிடிக்க வில்லை. மேலும் மழையும் ஒரு காரணம் ஆகும்.

விமானத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றி இருந்தால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்து இருக்கக்கூடும். மேலும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததும் உயிரிழப்பு பெருமளவில் குறைந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News